ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

0 857

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஆதரவு அளித்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை இங்கிலாந்து அரசு மேற்கொண்டது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜனவரி 31ம் தேதியன்று வெளியேறும் அரசின் தீர்மானத்திற்கு ஆதரவாக நேற்று 330 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 231 பேர் வாக்களித்தனர்.

இதனால் பிரிட்டன் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஒரு அத்தியாயத்தை எழுதும் அதிகாரம் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பிரச்சினை பிரிட்டனின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. பிரக்சிட் விவகாரம் தற்போது மிகக் குறைந்த பொருளாதார பாதிப்புடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து திட்டமிட்டபடி பிரிட்டன் வெளியேறுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments