காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகுமா?
ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசமாக அறிவித்து, மத்திய அரசு கொண்டு வந்த 370 சட்டப்பிரிவு ரத்து நடவடிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
செல்போன், இணையம் உள்ளிட்ட சேவைகள் முடக்கப்பட்டன. இதற்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவாகிய நிலையில் அனைத்து மனுக்களையும் விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம். மத்திய அரசின் நடவடிக்கை சட்டப்பூர்வமாக செல்லுபடியாகுமா என்பது குறித்து இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.
இணைய சேவைகள் முடக்கப்பட்டதால் வர்த்தக பரிவர்த்தன சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியிருப்பதால் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதாக மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி வரும் தீவிரவாதிகள் வதந்திகளைப் பரப்பி வன்முறையைத் தூண்ட முயற்சிப்பதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments