ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து தோனி விரைவில் ஓய்வு.! ரவி சாஸ்திரி தகவல்

0 1061

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை, தோனி விரைவில் அறிவிக்க கூடும் என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தகவல் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தாம் சமீபத்தில் தோனியுடன் பேசியதாக ரவி சாஸ்திரி கூறியுள்ளார். மேலும் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தோனி திறம்பட விளையாடியுள்ளார் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

இந்த வயதில் தோனி டி20 கிரிக்கெட்டை மட்டுமே விளையாட விரும்ப வேண்டும். எனினும் வர உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடும்போது, அவரது உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார். தோனியை பற்றி ஒரு விஷயம் எனக்கு நன்றாக தெரியும். அது என்னவென்றால் அவராகவே அணிக்கு திரும்ப நினைக்கமாட்டார்.

ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி தோனி அசத்தி விட்டால் டி20 அணியில் அவரை நிச்சயம் உள்ளே இழுக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த சமயத்தில் டி20 அணித்தேர்வுக்கான போட்டியில் தோனி இணைவார் என குறிப்பிட்டார் ரவி சாஸ்திரி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments