ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட 'இசட் பிரிவு' பாதுகாப்பு வாபஸ்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மத்திய உள்துறை வழங்கி வந்த 'இசட் பிரிவு' எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படுகிறது.
நாட்டில் உள்ள பல்வேறு முக்கிய தலைவர்களுக்கு அச்சுறுத்தலின் அடிப்படையில் மத்திய உள் துறை அமைச்சகம் பாதுகாப்பு வழங்குகிறது. இந்தநிலையில், கடந்த 6-ம் தேதி தமிழக காவல் துறை அதிகாரிகளுடன், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற அடிப்படையில் அவருக்கான பாதுகாப்பு திரும்ப பெறப்படுகிறது.
அவருக்கு மாநில காவல் துறை சார்பில் துப்பாக்கி ஏந்திய Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட 'இசட் பிரிவு' பாதுகாப்பும் திரும்பப் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments