2018-ல் நாடு முழுவதும் நாள்தோறும் சராசரியாக 80 கொலைகள், 91 கற்பழிப்பு சம்பவங்கள்..

0 2275

நாடு முழுவதும் கடந்த 2018-ம் ஆண்டு நாள்தோறும் சராசரியாக 80 கொலைகள், 289 கடத்தல்கள் மற்றும் 91 கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக, தேசிய குற்றப்பதிவு ஆவண காப்பக பணியகம் (NCRB) புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.

இதன்படி கடந்த 2017-ம் ஆண்டு பதிவான குற்றங்களின் எண்ணிக்கையை விட, 2018ம் ஆண்டில் 1.8% குற்றங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2018-ம் ஆண்டில் நாடு முழுவதும் மொத்தம் 50.74 லட்சம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

இவற்றில் 31.32 லட்சம் வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு உள்ளூர் சட்டங்களின் (எஸ்.எல்.எல்) கீழ் 19.41 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2018-ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தம் 1.05 லட்சம் கடத்தல் பதிவாகியுள்ளதாக NCRB வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டில் மொத்தம் 29,017 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2017ம் ஆண்டை ஒப்பிடுகையில் 1.3 சதவீதம் அதிகம். 2018-ம் ஆண்டில் 'பெண்களுக்கு எதிரான குற்றம்' பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 3,78,277. இந்த எண்ணிக்கை 2017 ல் 3,59,849-ஆக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments