சென்னையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதனப் பேருந்துகள்

0 2261

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் விரைவில் இயக்கப்பட உள்ள குளிர்சாதன பேருந்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.

சென்னை மாநகரில் பொங்கல் பண்டிகை முதல் சாதாரண மக்களும் பயணிக்கும் வகையில் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக 48 குளிர்சாதனப் பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. அவற்றில் ஒரு பேருந்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்.துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வமும் பேருந்தை ஆய்வு செய்தார். 

40 பயணிகள் அமர்ந்த நிலையிலும் 20 பயணிகள் நின்ற நிலையிலும் பயணிக்க இட வசதி கொண்ட இந்த பேருந்துகளில் நவீன முறையிலும், நல்ல தரத்திலும், அதிக இட வசதியுடனும் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதை பயணிகள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வகையில் ஒலிபெருக்கி அறிவிப்பு வசதி, பயணிகள் அவசரமாக இறங்கத் தேவை ஏற்பட்டால் ஓட்டுநருக்கு தெரிவித்து பேருந்தை நிறுத்துவதற்கான பட்டன் வசதி உள்ளிட்டவையும் இந்த பேருந்துகளில் உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments