கால் டாக்சி நிறுவனத்துக்கு முகவர் தேவை என விளம்பரம் செய்து மோசடி

0 711

முகவர்கள் தேவை என விளம்பரம் செய்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கால் டாக்சி நிறுவனம் மீது பாதிக்கப்பட்டவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

JDR Transport India pvt Ltd என்ற சென்னை நிறுவனம் புதிதாக தொடங்கவுள்ள ஐ டாக்சி நிறுவனத்துக்கு முகவர்கள் தேவை என சமூக வலைதளங்களில் விளம்பரம் பரவியதாக கூறப்படுகிறது. இதை நம்பி, முகவர் உரிமம் பெறுவதற்காக ஐ டாக்சி நிறுவன உரிமையாளர்களிடம் ஏராளமானோர் முன் பணமாக 60 லட்சம் வரை கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் ஐ டாக்சி நிறுவன உரிமையாளர் அசோகன், கண்மணி மற்றும் கார்த்திக் ஆகியோர் முகவர் உரிமம் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வருவதாக பணம் கொடுத்தவர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் தங்களின் பணத்தை திரும்ப பெற்றுத் தரவும் கோரிக்கை விடுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments