டாஸ்மாக் பார் மற்றும் உணவகத்தை சூறையாடிய மர்ம நபர்கள்

0 806

திருப்பூரில் டாஸ்மாக் பார் மற்றும் அதனருகில் இருந்த உணவகம் ஆகியவற்றில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதோடு, பார் ஊழியர்களையும் தாக்கிய நபர்களை சிசிடிவி காட்சிகள் கொண்டு ஊரக போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் - தாராபுரம் சாலையிலுள்ள முயல்பண்ணை பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இக்கடையின் பாரில் நேற்று மது அருந்திய 3 இளைஞர்கள், போதையில் சத்தமாக பேசியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பார் ஊழியர்கள் கேட்டபோது, இரு தரப்புக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 இளைஞர்களும் தங்களது நண்பர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து, பாரில் இருந்த நாற்காலி, மேஜை, ஆகியவற்றை அடித்து நொறுக்கியதோடு, அருகிலிருந்த  உணவகத்தை சூறையாடினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments