அவதார் படத்தின் கருத்துருவை தழுவி நவீன கார் வடிவமைப்பு

0 909

அவதார் படத்தின் கருத்துருவை தழுவி மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நவீன காரை, அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அத்திரைப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் அறிமுகம் செய்து வைத்தார்.

முழுவதும் தானியங்கி முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காரில், ஸ்டீரிங் வீல் கூட இல்லை. அதற்கு பதில் இருக்கைகளுக்கு மத்தியில் ஓட்டுநரின் இதயத்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றை நுண்ணுனரும் திறன் கொண்ட, கட்டுப்படுத்தும் அமைப்பு உள்ளது. மேலும் காரின் பின்பகுதியில் தன்னிச்சையாக இயங்கும் சிறு மடிப்பு போன்ற அமைப்புகளும் உள்ளன.image

காரின் சக்கரங்கள் பக்கவாட்டிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் மறுசுழற்சி செய்யக் கூடிய மூலப் பொருட்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பேட்டரிகளும், பயன்படுத்தப்பட்டுள்ளன.

image

image

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments