அரசு மனநல காப்பகத்தில் களைகட்டிய பொங்கல் விழா

0 775

சென்னை அயனாவரத்தில் உள்ள அரசு மனநல காப்பகத்தில் பொங்கல் விழா களைகட்டியுள்ளது.

இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை மகிழ்விக்கவும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பொங்கல் விழாவை கொண்டாடி வருகின்றனர்.காப்பகத்தின் இயக்குநர் பூர்ணசந்திராக தலைமையில் நடைபெற்ற விழாவில் பாண்டியாட்டம், பம்பரம் சுற்றுதல், கோலப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில், மனநலம் பாதிப்பிலிருந்து சிறிது சிறிதாக மீண்டுவருபவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு நாளை நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments