இளம்பெண் கடத்தலை தடுக்கும் போது உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர், வாகன சோதனையின் போது உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
மேலும் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு பகுதியில் இளம்பெண்ணை கடத்த முயன்ற ஆட்டோ ஓட்டுநரை துரத்திச் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த யாகேஷ் என்பவரது குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். யாகேஷுடன் இணைந்து உதவிய அவரது நண்பர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
Comments