அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை முற்றிலும் விலகும்

0 841

அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கிழக்கு பருவமழை முற்றிலுமாக விலகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில், வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் பெரும்பாலான மாவட்டங்களில் காலையில் பனிப்பொழிவு காணப்படும் என்றும் புவியரசன் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட இரண்டு விழுக்காடு அதிகமாக பொழிந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சென்னையை பொறுத்தவரை டிசம்பர் வரை 16 சதவீதம் மழை குறைவு என தெரிவித்தார்.

நீலகிரியில் 64 சதவீதமும், ராமநாதபுரம் மற்றும் நெல்லையில் தலா 45 சதவீதமும், தூத்துக்குடியில் 31 சதவீதமும், கோவையில் 29 சதவீதமும் அதிக மழை பொழிந்துள்ளதாக புவியரசன் கூறினார். மதுரை, பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 24 சதவீதம் மழை குறைவு எனவும் அவர் தெரிவித்தார்.

Watch polimernews online  : https://bit.ly/35lSHIO

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments