தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 சதவீத இடஒதுக்கீடு கோரி மனு

0 913

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2018 ம் ஆண்டு, தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த 106 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கன்னட மொழியில் படித்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதைப்போல, தமிழகத்தில் தமிழில் படித்தவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு, வரும் பிப்ரவரி மாதம் 20 ம் தேதிக்குள், சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவ கல்வி இயக்குனரகம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments