நொய்டா இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு

0 561

டெல்லி அருகே உள்ள நொய்டா இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

7 மாடிகள் கொண்ட மருத்துவமனையின் அடிதளத்தில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்த நோயாளிகளும், பணியாளர்களும் பீதி அடைந்தனர்.

தகவலறிந்து 6 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களை பத்திரமாக வெளியேற்றி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்களோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பெரும் குறைபாடுகள் இருந்துள்ளதாக தகவல் பதிவாகியுள்ளது.

ஏழு மாடி கட்டிடத்தில் தீப்பிடித்தபோது தீ எச்சரிக்கை அலாரம் ஒலிக்கவில்லை என கூறப்படுகிறது. மருத்துவமனையில் ஏராளமான தீயணைப்பு அமைப்புகள் வைக்கப்பட்டிருந்த போதும் அவற்றில் ஒன்றிரண்டு மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments