மலேசிய இறக்குமதிகளை தடை செய்ய இந்தியா ஆலோசனை - காரணம் என்ன ?
குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்டவற்றுக்கு எதிராக பிரதமர் மகாதிர் முகம்மது பேசி வருவதன் எதிரொலியாக, மலேசிய இறக்குமதியை தடை செய்யலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து மலேசிய பிரதமர் மகாதிர் முகம்மது ஐ.நா. பொதுச் சபையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாமாயில், மின்னணுப் பொருட்கள் உள்ளிட்ட மலேசிய இறக்குமதிக்கு தடை விதிக்கப்படலாம் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது நடைமுறைக்கு வந்தால் இந்தியாவின் பொருளாதார தடைக்கு ஆளாகும் முதலாவது வர்த்தக கூட்டாளியாக மலேசியா மாறிவிடும்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p
Comments