கோலா விலங்கின் தாகத்தை தீர்க்கும் தீயணைப்பு வீரர்
காட்டுத் தீயால் ஆஸ்திரேலியாவின் வனச் செல்வங்கள் அழிந்து வரும் நிலையில், தாகத்தால் தவித்த கோலா இன விலங்கு ஒன்றிற்கு, தீயணைப்பு வீரர் ஒருவர் தண்ணீர் கொடுக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி மனதை நெகிழ வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மின்னலால் பற்றிய தீ வேகமாக படர்ந்து ஏக்கர் கணக்கிலான காடுகளை சாம்பலாக்கி உள்ளது. இந்த காடுகள் கோலா விலங்குகளின் முக்கிய வாழ்விடமாக இருக்கின்றன.
கடந்த நவம்பரில் பற்றிய காட்டுத் தீயில் 350 க்கும் அதிகமான கோலாக்கள் கொல்லப்பட்டதாக வன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கங்காருவைப் போன்று குட்டியை 6 மாதம் வரை மடிப்பையில் சுமக்கும் இயல்புள்ளவை கோலாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments