அமெரிக்க நவீன டிரோன்களை வாங்குகிறது இந்தியா

0 1236

ஈரான் தளபதி காஸிம் சுலைமானியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்திய எம்.கியூ.9 ரீப்பர் (( MQ 9 Reeper)) ரக டிரோன்களை வாங்கும் இந்தியாவின் நீண்ட நாள் முயற்சி  விரைவில் பலனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

50 ஆயிரம் அடி உயரம் வரை பறந்து,  இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்த டிரோன்களை அமெரிக்காவின் ஜெனரல் அட்டோமிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவைகளால் 27 மணி நேரம் தொடர்ச்சியாக பறக்க முடியும். ஒபாமா அமெரிக்க அதிபராக முதல் தடவை இருந்த போதே இந்த டிரோன்களை வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்தது. 

இந்த நிலையில் தலா 460 கோடியே 70 லட்சம் ரூபாய் விலையில், 10 டிரோன்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக   கூறப்படுகிறது. பாகிஸ்தானில் எந்த இலக்கையும் தாக்குவதுடன், சீன எல்லைப்புறங்களில் நமது பாதுகாப்பை அதிகரிக்கவும் இவை மிகவும் உதவியாக இருக்கும்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments