பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

0 984

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் 2ம் போக பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, பாசனத்துக்கு இன்று முதல் மே 8ம் தேதி வரை 5.2 டிஎம்சி-க்கு மிகாமல் தண்ணீர் திறக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். இதன்படி, பவானிசாகர் அணையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீரை திறந்துவிட்டார்.

முதற்கட்டமாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ள தண்ணீர், படிப்படியாக 2200 அடி வரை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையில் இன்றைய நிலவரப்படி நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 32.8 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments