தீபிகா படுகோன் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

0 1113

நடிகை தீபிகா படுகோனே ஒரு திரைக்கலைஞர், சராசரி மனிதர்களுக்கு உள்ள உரிமைகள் அவருக்கும் உண்டு, தமது விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்திய மாணவர்களை சந்தித்து தீபிகா படுகோன் உரையாடியதையடுத்து டெல்லி பாஜக பிரமுகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். தீபிகாவின் சாபாக் படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் வசூலுக்கான ஸ்டன்ட் என்றும், அவரின் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் பாஜகவினர் தெரிவித்தனர்.

இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், திரைப்படக் கலைஞர்கள் மட்டுமல்ல, ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று போராட்டத்தில் கலந்து கொள்ளவும், அவர்களது கருத்தை தெரிவிக்கவும் உரிமை உள்ளது. இதில் ஆட்சேபனை இல்லை என்றார்.

தீபிகா படுகோன் எங்கு வேண்டுமானாலும் செல்ல அவருக்கு உரிமையும் சுதந்திரமும் உண்டு என்றார். அதே நேரத்தில் கல்வி பயில மாணவர்கள் செல்லும் பல்கலைக்கழகங்களில் வன்முறைகளுக்கு இடம் தரக்கூடாது என்றும் ஜவடேகர் வலியுறுத்தினார்.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments