ஜவஹர்லால் நேரு பல்கலை. விடுதிகளை ஏபிவிபி அமைப்பினரே தாக்கியதாகக் குற்றச்சாட்டு

0 824

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட தகராறில் ஏபிவிபி மாணவர் அமைப்பினரே விடுதிகளை அடித்து நொறுக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன் முகமூடி அணிந்த கும்பல் அங்கு நடத்திய தாக்குதலில் 30 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து டெல்லி காவல் இணை ஆணையர் ஷாலினி சிங் தலைமையில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தாக்குதல் நடத்தப்பட்ட பெரியார் மற்றும் சபர்மதி விடுதிகளைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது, கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் அளித்த அறிக்கையில்,இடதுசாரி மாணவர் அமைப்பினருக்கும், ஏபிவிபி மாணவர் அமைப்பினருக்கும் ஏற்கனவே மோதல் இருந்து வந்ததாகவும், சம்பவம் நடந்த தினத்தன்று ஏபிவிபி மாணவர் குழுவினர் விடுதிகளை அடித்து நொறுக்கியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments