புத்தகக் கண்காட்சியை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

0 718

சென்னையில் புத்தகக் காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

பபாசி என்ற புத்தக பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 13 நாட்களுக்கு நடைபெறுகிறது. பலநூறு அரங்குகள் அமைக்கப்பட்டு, நவீன இலக்கியம், திரைப்படம், கல்வி, கணினி தொடர்பான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

சுமார் 20 கோடி ரூபாய் விற்பனை இலக்குடன் தொடங்க விருக்கும் புத்தகக் காட்சிக்கு நுழைவுக்கட்டணம் 10 ரூபாய் என்றும், மாணவர்கள், மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்பவர்கள் போன்றவர்களுக்கு அனுமதி இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புத்தகக்காட்சிக்கு மெட்ரோ ரயில் வசதி இணைப்பு கிடைத்திருப்பது பேருந்துக்காக காத்திருப்பதைத் தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments