பெட்ரோல் நிலையத்தில் புகுந்த காட்டுப் பன்றி - விரட்ட முயன்றவர்களை பந்தாடியது

0 1158

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் நிலையத்திற்குள் புகுந்த காட்டுப் பன்றி அங்கிருந்த ஊழியர்களை தாக்கி துவம்சம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது.

சுல்தான்பூர் பகுதியில் வனப்பகுதி அருகே பெட்ரோல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு காட்டுப் பன்றி ஒன்று புகுந்து விடவே, ஊழியர்கள் அதனை விரட்ட முயன்றனர். இதனால் கோபமடைந்த அந்த பன்றி ஊழியர்களை தாக்கி தூக்கி வீசியது.

ஆனாலும் ஊழியர்களும் விடாப்பிடியாக காட்டுப் பன்றியை கழி மற்றும் இரும்புக் கம்பிகளால் அடித்து விரட்ட முயன்றனர். எதற்கும் சளைக்காத அந்த காட்டுப் பன்றியோ ஒவ்வொருவரையும் தூக்கி வீசி பந்தாடியது. இறுதியில் களைத்துப்போன பன்றி தானாக வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments