4 புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம்
கோவாவில் 2 குட்டிகள் உள்பட 4 புலிகள் கொலை செய்யப்பட்டு, அவற்றின் உடல்கள் வனச்சரகத்தில் அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டன.
இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்த கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். மத்திய வனத்துறை அமைச்சகம், சுற்றுச்சூழல் அமைச்சகம் கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கோவா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார் . இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக இரு விவசாயிகள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கால்நடைகளை புலிகள் கொன்றுவிடுவதால், அவற்றை இரைச்சியில் விஷம் வைத்து விவசாயிகள் கொன்று விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Comments