தெலுங்கர்களை வந்தேறி என்றழைப்பவர்கள் பங்களாதேசிகளுக்கு குரல் கொடுப்பது ஏன் ?

0 2162

தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களை வந்தேறி என்று கோஷமிடுபவர்கள், பங்களாதேஷில் இருந்து வந்தவனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஏன் ? என்று கேள்வி எழுப்பி உள்ள ராதாரவி, இங்குள்ள இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால், தான் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாகவும் சவால் விடுத்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக சென்னையில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நடந்த பேரணியின் முடிவில் பேசிய நடிகர் ராதாரவி, தமிழகத்தில் உள்ள தெலுங்கு பேசும் மக்களை வந்தேறி என்று கோஷமிடுபவர்கள், பங்களாதேஷில் இருந்து வந்தவனுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஏன் ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இங்குள்ள இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால், தான் இஸ்லாத்தை தழுவத் தயாராக இருப்பதாக தெரிவித்த ராதாரவி, இலங்கை தமிழர்களுக்காக போராடுவதைப் போல சிலர் பணத்துக்காக நடிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments