ஜெயகுமாரா? ஜெயராமனா ? பசி மயக்கத்தில் அமைச்சர்..!

0 1401

சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரையும்,  இலாக்காக்களையும், அவரது சக அமைச்சரான டாக்டர்.சரோஜா மாற்றிக் கூறியதால் சிரிப்பலை ஏற்பட்டது.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சமுதாயநலக்கூடத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேடையில் பேசிய அமைச்சர் சரோஜா, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் என்பதற்கு பதிலாக , மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் ஜெயக்குமார் என தவறுதலாக கூறிவிட்டு பின்னர் சுதாரித்துக்கொண்டு தவறை திருத்தினார்.

பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் என்பதற்கு பதிலாக ஜெயராமன் என மீண்டும் தவறுதலாக கூற...மேடையில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட அமைச்சர் ஜெயக்குமார், பசி மயக்கமா என கேட்க....அமைச்சர் சரோஜாவும் ஆம் பசி பசி என பதிலளிக்க அரங்கில் சிரிப்பலை எழுந்தது

அமைச்சர் சரோஜா, தனது இலாக்காவையும், பெயரையும் தவறாக குறிபிட்ட நிலையிலும், அதனை பெரிய பிரச்சனையாக்காமல் தனது நகைச்சுவை உணர்வால் அரங்கையே சிரிக்கவைத்த ஜெயக்குமாரை விழாவுக்கு வந்திருந்தவர்கள் வியப்பாக பார்த்தனர். அதே நேரத்தில் அமைச்சராக இருக்கும் சரோஜாவுக்கு, சக அமைச்சரின் பொறுப்பும் பெயரும் கூட தெரியவில்லையே என அங்கலாய்த்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments