கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை நடைபாதை- உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல்
சென்னை மெரினாவில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை, நடைபாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில், கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை லூப் சாலையில் நடைபாதை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாநகராட்சியின் விண்ணப்பத்தை பரிசீலிக்குமாறு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை வரும் 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
Comments