BHEL நிறுவன பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 1558

பெல் உட்பட மத்திய அரசின் 5 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, BHEL எனப்படும் பாரத மிகுமின் நிறுவனம் தவிர, நீலச்சல் இஸ்பட் நிகாம் (Neelachal Ispat Nigam), தேசிய கனிம வளர்ச்சி நிறுவனம், MECON ஆகியனவற்றின் பங்குகளை விற்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியாவை தனியார் மயமாக்கும் நடைமுறைகளுக்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

இந்தியன் ரயில்வேக்கு தேவையான எரிபொருள்களை வழங்குவதற்கு பிரான்ஸுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைகளை ஒருங்கிணைக்கும் வகையில், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத பல்கலைக்கழகத்திற்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவன அந்தஸ்து வழங்கவும், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments