அமெரிக்காவை தாக்குவதற்கான பலம் ஈரானிடம் இருக்கிறதா..?

0 3004

காஸிம் சுலைமானியின் கொலைக்கு பழிவாங்க, ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தினாலும், முக்கிய வல்லரசு எதிரியான அமெரிக்காவை தாக்குவதற்கான திறன் அதற்கு இருக்கிறதா என ஆராய்கிறது இந்த  செய்தித்...

பல ஆண்டுகளாக போர் ஆயத்தங்களில் ஈடுபட்டு வந்தாலும், எல்லா வகையிலும் நவீனமான அமெரிக்காவை நேரடியாகத் தாக்கும் திறன் ஈரானுக்கு கிடையாது. 5 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை ஈரான் ராணுவம் கொண்டிருந்தாலும், சர்வதேச தடைகளின் காரணமாக நவீன ஆயுதங்களை அதனால் வாங்க இயலாத நிலை உள்ளது. இதை ஈடுகட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, டிரோன்கள் மற்றும் மத்திய ஆசியாவில் இயங்கும் புரட்சிக் குழுக்களை நம்பி இருக்கிறது ஈரான்.

அமெரிக்காவுடன் நேரடிப் போரில் ஈரான் ஈடுபட்டால் நசுக்கப்பட்டு விடும் என்பதால், மறைமுக போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையே விரும்புகிறது. மத்திய கிழக்கில் அதிக எண்ணிக்கையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் ஈரானிடம் இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை சவூதி அரேபியாவின் எண்ணைய் ஆலைகள் மீது சென்ற ஆண்டு வீசிய அனுபவமும் ஈரானுக்கு இருக்கிறது. அந்த தாக்குதலால் உற்பத்தி பாதியாக குறைந்து, சர்வதேச கச்சா எண்ணெய் சப்ளை 5 சதவிகிதம் குறைந்தது. 

ஸ்கட் பிரிவைச் சேர்ந்த ஈரானின் ஏவுகணைகள் 750 கிலோ மீட்டர் வரையும், வடகொரியாவிடம் இருந்து வாங்கிய நோ டாங்(No Dong) ஏவுகணைகள் 2 ஆயிரம் கிலோமீட்டர் வரையும் சென்று தாக்கும் திறன் படைத்தவை. இவற்றால் இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் வரை சென்று தாக்க முடியும். ஈரான் புரட்சிப் படையிடம் ஏவுகணை பொருத்தப்பட்ட விரைவுபடகுகளும், நடுத்தர நீர்மூழ்கிகளும் உள்ளன.

இவை வளைகுடாவில் சஞ்சரிக்கும் அமெரிக்க போர்க்கப்பல்களையும், எண்ணெய் கப்பல்களையும் தாக்கக்கூடும். போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் பீரங்கிகள் போன்றவற்றில் ஈரான் பின்நிலையில் இருந்தாலும், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றில் ஈரானின் திறமையை குறைத்து மதிப்பிட முடியாது. சுருக்கமாக கூறினால், பாரசீக வளைகுடாவில் போர் செய்ய ஈரானுக்கு பெரிய படைபலமோ, போர்க்கப்பல்களோ தேவையில்லை என்பதே உண்மை.

மத்திய கிழக்கில் உள்ள ஹிஸ்புல்லா உள்ளிட்ட தீவிரவாத குழுக்களும் சுலைமானியின் கொலைக்கு பழி தீர்க்கப் போவதாக கூறியுள்ளன. இந்த மிரட்டலை சமாளிக்க ஈராக்கில் அமெரிக்காவின் 5 ஆயிரம் துருப்புகள் உள்ளன.

குவைத், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன் என மத்திய கிழக்கின் பல நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ நிலைகள் உள்ளன. ஒரு வேளை போர் துவங்கினால் முதல் கட்ட நடவடிக்கைகள் இந்த நிலைகளில் இருந்து எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments