தமிழ் முன்னணி நடிகர்களிடமிருந்து மிகப்பெரிய பாடங்களை கற்றுள்ளேன்.. பிரித்விராஜ் ஓபன் டாக்
மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். தமிழ் திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கோலிவுட் முன்னணி நடிகர்களிடம் இருந்து, தாம் பலவற்றை கற்று கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடித்து திரைக்கு வந்த மலையாள படமான Driving Licence வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் Driving Licence திரைப்படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட நடிகர்களிடம் இருந்து தாம் பல விஷயங்களை கற்று கொண்டதாக குறிப்பிட்டார்.
நடிகர் அஜித் பற்றி கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சூர்யாவின் வீட்டு விசேஷம் ஒன்றில் பங்கேற்க சென்ற போது நடிகர் அஜித்தை சந்தித்ததாக கூறினார். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் அவருடன் செலவிட்டேன். அப்போது நான் தெரிந்து கொண்ட விஷயம், அவரது படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்போது அவர் உற்சாகமடைய மாட்டார். மேலும் அவரது படங்கள் வெற்றி பெற தவறும் போது ஏமாற்றமடைய மாட்டார். அஜித்தின் இந்த பாதையை தான், தாமும் பல வருடங்களாக பின்பற்றுவதாக கூறினார்.
நடிகர் விஜய் பற்றி கூறுகையில், அவரிடமிருந்து நான் கற்று கொண்ட விஷயம் கடின உழைப்புக்கு மாற்று வேறு எதுவும் இல்லை என்பதே என்றார். தொடர்ந்து பேசிய அவர், சில வருடங்களுக்கு முன் ஒரு திரைப்படத்தில் இருந்து நான் நீக்கப்பட்டேன். படம் எப்படி வரும் என்ற ஆர்வத்தில், டைரக்டரிடம் நான் அதிக கேள்விகளை கேட்டதால் நடவடிக்கைக்கு ஆளானேன். உறுதியாக சொல்கிறேன் அவர் வேலையில் தலையிடவில்லை.
அதுவும் நல்லதிற்கு தான் என நினைத்து கொண்டு திரைத்துறையில் உள்ள டெக்னாலஜி விஷயங்களை கற்பதில் ஆர்வம் செலுத்தி, மெருகேறிய பிறகே மோகன் லால் அவர்களை வைத்து Lucifer வெற்றி படத்தை இயக்கினேன் என கூறினார்.
Comments