விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த தடை
சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும் வரை விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விழுப்புரம் - நாகை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்டத்தால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள், வனங்கள் பாதிக்கப்படுவதாக கூறி டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யாமல் இந்த திட்டம் கொண்டு வருவதால், விவசாய நிலங்கள், வனப்பகுதிகள் மற்றும் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின் கீழ்முறையான அனுமதி பெறும் வரை, திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த கூடாது என நெடுஞ்சாலை துறைக்கு உத்தரவிட்டனர்.
அதே சமயம் நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், சுற்றுசூழலின் முறையான அனுமதி பெறும் பட்சத்தில் திட்டத்தை செயல்படுத்தலாம் என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும் சாலைப்பணிக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் தலா 10 மரம் என்கிற விகிதத்தில் நடப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்
Watch More ON : https://bit.ly/35lSHIO
Comments