சோமாலியாவில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் படுகாயம்

0 750

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் நடந்த குண்டுவெடிப்பில் 11 பேர் படுகாயமடைந்தனர்.

அந்நாட்டின் தலைநகர் மொகாடிஷுவில்((Mogadishu)) குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் நிறைந்த இடத்தில் திடீரென வெடிகுண்டு வெடித்ததில் சுற்றுவட்டாரம் கரும்புகையால் சூழ்ந்தது.

Read More : ஈரானில் விமானம் விபத்து... 170 பயணிகள் உயிரிழப்பு ..!

மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள இடத்தில் நடந்த இந்த தாக்குதலுக்கு தற்போது வரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தற்போது படுகாயமடைந்துள்ள 11 பேரில் மூன்று பெண்களும் அடக்கம்.

சம்பவம் குறித்து தகவல் கூறியுள்ள போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பு சோதனைச் சாவடியை குறிவைத்து தற்கொலைப்படை தீவிரவாதி கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.  கடந்த வாரம் மொகாடிஷுவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Watch More ON : https://bit.ly/35lSHIO

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments