ஆக்சிஸ் வங்கியில் இருந்து கடந்த சில மாதங்களில் 15000 பேர் ராஜினாமா
ஆக்சிஸ் வங்கியில் இருந்து கடந்த சில மாதங்களில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் ராஜினாமா செய்துள்ளதால், அந்த வங்கியின் அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல கிளைகள் சிக்கலை எதிர்கொண்டுள்ளன.
நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட அழுத்தமே இத்தனை ராஜினாமாக்களுக்கு காரணம் என கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு தாங்க முடியாத அளவிற்கான வர்த்தக இலக்குகள் நிச்சயிக்கப்பட்டதால், கலக்கமடைந்த பலர் பதவிகளை ராஜினாமா செய்து விட்டனர் என வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Read Also : மறுபிறவி எடுத்து வருகிறது பஜாஜ் சேதக் ஸ்கூட்டர்
ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ், கணினிமயம் உள்ளிட்ட நடைமுறை மாற்றங்களால் தங்களின் பணி குறித்த குழப்பங்களுக்கு ஆளாகி பல முதுநிலை அதிகாரிகளும் ராஜினமா செய்துள்ளனர். கடந்த சில மாதங்களில் நடந்த இந்த ராஜினாமாக்களை ஏற்றுக் கொண்டுள்ள ஆக்சிஸ் வங்கி நிர்வாகம், புதிய ஊழியர்களை எடுக்கும் பணியை துரிதப்படுத்தி உள்ளது.
Watch More ON : https://bit.ly/35lSHIO
Comments