உன்னால முடியாதுன்னு நிறைய பேர் கிண்டல் பண்ணாங்க.. மேடையில் உணர்ச்சிவசப்பட்ட கீர்த்தி சுரேஷ்

0 1463

தமிழ் திரைத்துறைக்குள் நுழைந்த குறுகிய காலத்தில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற அவர், தான் தேசிய விருது வாங்கியது பற்றி உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து  மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு, நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் வெளியானது. இதில் நடிகையர் திலகத்தின் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.  மேலும் இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளிலும் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Read More : உலகம் முழுக்க 7ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது தர்பார்

திரைப்படத்தை பார்த்த அனைவரும் நடிகையர் திலகமாகவே கீர்த்தி சுரேஷ் வாழ்ந்திருப்பதாக பாராட்டினர். இதற்காக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு சமீபத்தில் தேசிய விருதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், நான் நடிகையர் திலகம் படத்தில் நடித்த போது என்னை பலரும் கேலியும், கிண்டலும் செய்தனர். உன்னால் இந்த படத்தில் சிறப்பாக நடிக்க முடியாது. இந்த படத்தில் நடித்து நீ என்ன தேசிய விருதா வாங்க போற என நிறைய பேர் கேட்டாங்க.

அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் நல்ல பதில் நான் கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறன் என்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு அரங்கில் இருந்த ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர்.

முன்னதாக கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் நடிக்க துவங்கிய போது, நடிகை சாவித்ரியின் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சரியான தேர்வாக இருக்கமாட்டார் என பலரும் நினைத்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Watch More ON : https://bit.ly/35lSHIO

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments