கடத்தப்பட்டதாக கூறப்படும் திமுக ஒன்றிய கவுன்சிலரை ஆஜர்படுத்த உத்தரவு
கடத்தப்பட்டதாக கூறப்படும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய 8 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் சாத்தையாவை நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அவரது மகன் ராஜா தொடுத்த மனுவில், அதிமுகவினர் அவரை கடத்திச் சென்று அடைத்து வைத்திருப்பதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, சாத்தையாவை நாளை நேரில் ஆஜர்படுத்தவில்லை எனில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதுதொடர்பான அறிக்கையுடன் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது.
Watch More ON : https://bit.ly/35lSHIO
Read Also : சிறுமி என நினைத்து பாலியல் பலாத்காரம் செய்ய சிறுவனை தூக்கிய விபரீதம்
Comments