ரூ.5 கோடி நிதியில் மதுவிலக்கு குறித்து விழிப்புணர்வு: அமைச்சர் தங்கமணி
5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, மக்கள் மத்தியில் மதுவிலக்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மதுவிலக்கு குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ கே.ஆர். ராமசாமி கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், பூரண மதுவிலக்கு என்பதுதான் அரசின் கொள்கை என்றும், மதுபான கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைப்பதுதான் அரசின் திட்டம் என்றும் குறிப்பிட்டார்.
மதுபான விலை 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும், இதனால் மதுபான விற்பனை குறித்த தகவல் வரும்போது விற்பனை அதிகம் நடைபெறுவது போல் தெரிவதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.
இதற்கிடையே பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம், புதுச்சேரியில் சூதாட்ட கிளப் தொடங்க காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்து வருவதை சுட்டிக்காட்டினார். மேலும், மதுவிலக்கில் காங்கிரஸின் நிலைப்பாடு மாநிலத்துக்கு மாநிலம் மாறுமா எனவும் கேள்வியெழுப்பினார்.
Comments