கூடுதலாக 25 ரன்களை இலங்கை அணி சேர்த்திருந்தால் இந்திய அணிக்கு நெருக்கடி அளித்திருக்கலாம்: ஆர்தர்

0 1110

இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், கூடுதலாக 20 முதல் 25 ரன்களை சேர்த்திருந்தால், இந்தியாவுக்கு இலங்கை அணியால் நெருக்கடி அளித்திருக்க முடியும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ஆர்தர் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வென்றது. பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய ஆர்தர், இளம் வீரர்களை  ஊக்குவிப்பது மற்றும் முக்கிய கட்டங்களில்  பொறுப்புகளை அளிப்பது குறித்து இந்திய அணியிடம் பிற அணிகள் பாடம் கற்க வேண்டும் என்றார்.

இந்திய அணி சிறந்த அணியாகவும், பலகீனம் இல்லாத அணியாகவும் திகழ்வதாக கூறிய அவர், உலக கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மற்றும் இந்திய அணிகளே ஆதிக்கம் செலுத்தும் எனவும் குறிப்பிட்டார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments