சட்டப்பேரவையில கூட்டுறவுச் சங்கங்கள் திருத்த சட்ட மசோதா தாக்கல்
கூட்டுறவு சங்கங்களின் தலைவர் மற்றும் துணை தலைவர் செய்யும் தவறுகளுக்கு தண்டனை விதிக்க வழிவகுக்கும் சட்டதிருத்த மசோதாவை அமைச்சர் செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவில், கையாடல், மோசடி மற்றும் தவறான நடத்தைகளுக்கு கூட்டுறவு சங்க தலைவர், துணை தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கூட்டுறவு சங்க தலைவரோ, அல்லது துணை தலைவரோ குற்றமிழைத்ததற்கான சாட்சியம் இருக்கும்பட்சத்தில், அவர்களை ஆறு மாத காலத்துக்கு தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யலாம் என்றும் அதற்கான காரணத்தை எழுத்து வடிவில் பதிவு செய்யலாம் என்றும் சட்டதிருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் நாளை இந்த திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.
Comments