டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் நேரடி கொள்முதல் மையங்கள் - உணவுத்துறை அமைச்சர்
நெல் வரத்து அதிகமாக இருந்தால் டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார்.
சட்டபேரவையில் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் இல்லாததால், குறைந்த விலைக்கு நெல்லை விற்கும் சூழல் நிலவுவதாக கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், நெல் வரத்து அதிகமாக இருக்கக்கூடிய டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் 38 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், திருவள்ளூர் மாவட்டத்தில் நெல் அதிகம் விளைச்சல் ஆவதை சுட்டிக்காட்டி, அந்த மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுமா என கேள்வியெழுப்பினார். அதற்கு அரசு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் பதிலளித்தார்.
Comments