'டான்செட்' நுழைவுத் தேர்வுக்கு வரும் 31 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

0 1082

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான 'டான்செட்' ((TANCET)) நுழைவுத் தேர்வுக்கு இம்மாதம் 31 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

2020 ம் கல்வி ஆண்டுக்கான M.E., M.Tech., M.Arch., M.Plan., MBA., MCA.,ஆகிய படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு வரும் பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இத்தேர்வு எழுத பொறியியல், தொழில்நுட்பப் பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 45 சதவீத மதிப்பெண் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு www.annauniv.edu என்ற இணைய தளத்தில் தொடங்கியுள்ள நிலையில், இம்மாதம் 31 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments