ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் 2022ம் ஆண்டு வரை நீட்டிப்பு

0 1025

தமிழகத்தில் அரசு ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் சிறப்பு அம்சங்களுடன் 2022 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் க. அன்பழகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அரசு ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டுத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

மேலும், 4 லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை பெறும் வகையிலும் சிறப்பு அறுவை சிகிச்சைகளுக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் வரை காப்பீடு பெறும் வகையிலும் புதிய காப்பீடு திட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஓய்வூதியதாரர்களின் பெற்றோருக்கும் சிகிச்சை அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்கவுள்ளதாகவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார்

Watch More ON : https://bit.ly/35lSHIO

Also Read :ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் 2022ம் ஆண்டு வரை நீட்டிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments