நீதிமன்ற உள்கட்டமைப்பிற்காக ரூ.287 கோடி ஒதுக்கீடு - சட்டத்துறை அமைச்சர்

0 569

நீதிமன்ற உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த இதுவரை 287 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்றும் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி தொகுதியில் புதிய நீதிமன்றம் அமைக்க அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சிவி சண்முகம், மாவட்ட நீதிமன்றத்தில் பெறப்படும் வழக்கு எண்ணிக்கையின் அடிப்படையிலும், மாவட்ட நீதிபதியின் பரிந்துரையின் பேரிலும் மட்டுமே புதிய நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் 51 நீதிமன்றங்களை 3 கட்டங்களாக திறக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Watch More ON : https://bit.ly/35lSHIO

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments