இடம் தந்தால் துணை மின் நிலையம் - அமைச்சர் தங்கமணி

0 963

மின்சார வாரியத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இடத்தை தேர்வு செய்து கொடுத்தால் துணை மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில்,  கேள்வி நேரத்தின்போது திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ஆகியோர், தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில், துணை மின் நிலையம் அமைக்கப்படுமா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கோரிக்கை விடுக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், திருத்தணி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதிகளில், இடத்தைத் தேர்வு செய்து கொடுத்தால், துணை மின் நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments