சிறுமி என நினைத்து பாலியல் பலாத்காரம் செய்ய சிறுவனை தூக்கிய விபரீதம்
செங்கல்பட்டு அருகே பாலியல் ரீதியில் துன்புறுத்தும் திட்டத்துடன் சிறுமி என நினைத்து சிறுவனை புதருக்குள் தூக்கி சென்ற இளைஞரை தர்ம அடி கொடுத்து, காவல்நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
இருங்குன்றப்பள்ளி பாலமுருகன் தெருவை சேர்ந்தவரின் 6 வயது மகன் நேற்று இரவு அங்குள்ள கடைக்கு வந்தபோது, உத்திரமேரூர் காவூர் கிராமத்தை சேர்ந்த சிவாஜி, சிறுமி என நினைத்து அந்த சிறுவனை புதருக்குள் தூக்கி சென்றுள்ளான்.
சிறுவன் கத்தி கூச்சலிட்டதும், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து சிவாஜியை நையபுடைத்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவனை போலீஸார் கைது செய்தனர்.
Comments