சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலியா முடிவு
காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவில், தண்ணீரை அதிகம் உறிஞ்சி, மக்களுக்கு நீர்ப்பஞ்சம் ஏற்படுத்துவதாக கூறி, சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல முடிவெடுத்துள்ளனர்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவிவரும் நிலையில் அங்குள்ள ஏராளமான ஒட்டகங்கள், குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து தண்ணீரை குடித்துச்செல்வதாக கூறப்படுகிறது.
வீட்டு வேலிகளை தட்டுவதுடன், ஏ.சியில் வழியும் நீரை குடிப்பதற்காக வீடுகளை சுற்றிச் சுற்றிவந்து இடையூறு செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை பிடித்து, ஹெலிகாப்டரிலிருந்து துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல அந்நாட்டினர் முடிவெடுத்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் சுமார் 10 லட்சம் ஒட்டகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Watch More ON : https://bit.ly/35lSHIO
Read More : அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - 80 பேர் பலி?
Read More : ஈரானில் விமானம் விபத்து... 170 பயணிகள் உயிரிழப்பு ..!
Comments