இளம் பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற மர்மக் கும்பல்... கூக்குரலிட்ட மாமியாருக்கும் கத்தி குத்து

0 1027

மதுரையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளம் பெண்ணை மர்மக் கும்பல் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் பெண்ணின் கணவனிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரேஸ்கோர்ஸ் சாலையைச் சேர்ந்த குமரகுரு என்பவர் வீட்டில் இன்று அதிகாலை புகுந்த மர்மக் கும்பல், அவரது மனைவி லாவண்யாவை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

கூக்குரலிட்ட லாவண்யாவின் மாமியார் சீனியம்மாளையும் அந்தக் கும்பல் கத்தியால் குத்திவிட்டுத் தப்பியதாகக் கூறப்படும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லாவண்யாவின் செல்ஃபோன், சுற்றுவட்டாரத்தில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் ஆகியவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லாவண்யாவுக்கும், வேறு ஒருவருக்கும் தவறான தொடர்பு இருந்ததாகவும், கணவன் மனைவியிடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படும் நிலையில் குமரகுரு மீது சந்தேகம் வலுத்து வருவதால் போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments