நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என தகவல்

0 618

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய புள்ளியியல் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்,  கடந்த 2018-19 நிதியாண்டில் 6 புள்ளி 2 சதவீதமாக காணப்பட்ட தயாரிப்பு துறையின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, வேளாண், கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம் போன்ற துறைகளின் வளர்ச்சியிலும் சரிவு காணப்பட்டுள்ளதாகவும், அதேசமயம், சுரங்கம், பொது நிர்வாகம், பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளில் சிறிய வளர்ச்சி தென்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments