டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான பாடத்திட்டம் மாற்றம்

0 1050

டிஎன்பிஎஸ்சி குரூப் ஒன் தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே, இனி குரூப் ஒன் முதல்நிலை எழுத்துத்தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இந்த புதிய பாடத்திட்டத்தில் வரலாறு உள்ளிட்ட சில பாடங்களில் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டு தமிழுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் திருக்குறள் மற்றும் சங்க இலக்கியம் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் மாற்றி வடிவமைக்கப்பட்ட குரூப் 2 பாடத்திட்டத்துடன், இந்த புதிய பாடத்திட்டம் நூறு சதவீதம் ஒத்துப்போவதால், குரூப் 2 தேர்வுக்கு தயார் செய்பவர்கள், குரூப் ஒன் தேர்வுக்கான முதல்நிலை தேர்வையும் எளிமையாக அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் டிஎன்பிஎஸ்சி குரூப் ஒன் முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றும், பழைய பாடத்திட்டமே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments