ஜேஎன்யூ தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள் - பிரகாஷ் ஜவ்டேகர்

0 760

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முகமூடியணிந்து தாக்குதல் நடத்தியவர்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ஜேஎன்யு தாக்குதல் சம்பவம் தொடர்பாக திட்டமிட்ட வதந்திகள் நாடு முழுவதும் பரப்பப்படுகின்றன என்று குற்றம் சாட்டினா. இச்சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறிய அவர், முகமூடியுடன் தாக்குதலில் ஈடுபட்டவர்களின் முகமூடிகள் விரைவில் கழற்றப்பட்டு அவர்கள் மக்கள் முன் பகிரங்கப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் ஜேஎன்யூ சம்பவம் தொடர்பாக வன்முறையைத் தூண்டி விடுபவர்களும், வதந்தி பரப்புபவர்களும் விரைவில் அம்பலப்படுத்தப்படுவார்கள் என்றும் பிரகாஷ் ஜவ்டேகர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments