ஈரானில் விமானம் விபத்து... 170 பயணிகள் உயிரிழப்பு ..!

0 3513

ஈரானில், புறப்பட்ட சில நிமிடங்களில், உக்ரைன் பயணிகள் விமானம், விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், விமானத்தில் இருந்த 170 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

உக்ரைன் இண்டர்நேஷனல் ஏர்லைன்சுக்குச் சொந்தமான போயிங் 737-800 ரக விமானம், 170 பேருடன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து, உக்ரைன் நாட்டின் கிவ் நகருக்கு, இன்று காலை புறப்பட்டது. விமானம் புறப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், தெஹ்ரான் தெற்கு புறநகர் பகுதியில், விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதுதொடர்பாக பேசிய, ஈரான் சிவில் விமானப் போக்குவரத்துறை செய்தித்தொடர்பாளர் ரேசா ஜபார்சாத் (Reza Jafarzadeh), விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில், விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, விமானம் தீப்பிடித்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர் கூறியிருக்கிறார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே, விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்த பயணிகள், விமான சிப்பந்திகள் உட்பட 170 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

Also Read : அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் - 80 பேர் பலி?

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments