தகவல் மற்றும் தொலைத் தொடர்புக்கான செயற்கைக் கோளை செலுத்தியது சீனா
தகவல் தொடர்புக்கான புதிய செயற்கைக் கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஸி சங் ஏவுதளத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி இரவு 11.20 மணிக்கு இந்த செயற்கைக் கோள் செலுத்தப்பட்டது. இரவு நேரத்தில் செலுத்தப்பட்டதால் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற நெருப்பை உமிழ்ந்தபடி விண்ணில் சீறிப்பாய்ந்தது மார்ச் 3பி ராக்கெட்.
தகவல் தொடர்பு, தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட தொலைத் தொடர்புக்காகவும் இந்த செயற்கைக் கோள் செலுத்தப்பட்டதாக சீன அரசு தெரிவித்துள்ளது. மார்ச் 3பி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் 324வது செயற்கைக் கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p
Comments